மிகவும் கடினமாகும் நிலைமை... அவர்களை அனுமதிக்க முடியாமல் போகும்: எச்சரிக்கும் சுவிஸ் மருத்துவர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
203Shares

சுவிட்சர்லாந்தில் அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை படுக்கைகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயம் அடைவோரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சுவிஸ் மருத்துவமனைகள் நிரம்பும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. கடுமையான மற்றும் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள படுக்கைகளில் செவ்வாயன்று 80 சதவிகிதம் அளவுக்கு நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பத்து மாகாணங்கள் அவர்களின் சான்றளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கான இடங்கள் நிரம்பியுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

இதில், ஃப்ரீபர்க், சோலோத்தர்ன், துர்காவ், வலாய்ஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நோயாளிகளை எவ்வித தயக்கமும் இன்றி மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாமல் போயுள்ளது.

சூரிச் மருத்துவமனைகளில் மட்டும் திங்களன்று 535 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 99 பேர் ஞாயிறன்று தீவிர சிகிச்சைக்கு அனுமதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சூரிச் மருத்துவமனைகளில் முதன் முறையாக உயிர் காக்கும் சிகிச்சை நாடுவோரை திருப்பி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, இதுவரை 100 அறுவைசிகிச்சையேனும் ஒத்திவைக்க நேர்ந்துள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்காவ் மண்டலத்தில் மட்டும் இதுவரை 700 அறுவைசிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முக்கிய மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதே நிலைதான் பாஸல் பல்கலைக்கழக மருத்துவமனையிலும் என்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் ஒத்திவைக்கப்படும் அறுவைசிகிச்சைகளின் எண்ணிக்கை எஞ்சிய மாகாணங்களை ஒப்பிடுகையில் இங்கு குறைவு என கூறுகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்