சுவிட்சர்லாந்தில் தீவிரமாகி வரும் கொரோனா! இதுவரை பலி மட்டும் எத்தனை தெரியுமா? அரசின் எச்சரிக்கையும்-கோரிக்கையும்

Report Print Santhan in சுவிற்சர்லாந்து
1092Shares

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் வீட்டிலே இருக்குமாறு சுவிட்சர்லாந்து அரசு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாகிக் கொண்டு தான் இருக்கிறது தவிர, இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இதன் காரணமாக சுவிஸ் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது சுவிட்சர்லாந்து அரசு, கடந்த சில நாட்களாகவே நாட்டில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று 4 லட்சத்தைக் கடந்துள்ளது. 6,000 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

எனவே கொரோனா பரவலைத் தடுக்க உணவு விடுதிகள், விளையாட்டு மையங்கள், ஆகியவை மூடப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு, வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்த கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில், அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சவுதி ஆகிய நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்