நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு... கொரோனா தடுப்பூசி குறித்து சுவிஸ் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு!

Report Print Basu in சுவிற்சர்லாந்து
663Shares

சுவிட்சர்லாந்தில் Pfizer/BioNTech தடுப்பூசியை பயன்படுத்த ஒழுங்குமுறை ஆணையமான Swissmedic ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு மாத படிப்படியான மதிப்பீட்டைத் தொடர்ந்து Pfizer/BioNTech தடுப்பூசி சுவிட்சர்லாந்தில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று Swissmedic தெரிவித்துள்ளது.

கிடைக்கக்கூடிய தகவல்களை உன்னிப்பாக ஆய்வு செய்த பின்னர், Pfizer/BioNTech உருவாக்கிய கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் அதன் நன்மை அபாயங்களை விட அதிகமாக உள்ளது என்றும் Swissmedic முடிவு செய்தது என்று ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி Pfizer/BioNTech உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தடுப்பூசிகளின் அங்கீகாரம் விவகாரத்தில் நோயாளிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று Swissmedic இயக்குனர் Raimund Bruhin கூறினார்.

படிப்படியான ஆய்வு நடைமுறைக்கு மற்றும் எங்கள் குழுக்களுக்கு நன்றி, ஆயினும்கூட நாங்கள் விரைவாக ஒரு முடிவை எட்ட முடிந்தது.

அதே நேரத்தில் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகிய மூன்று மிக முக்கியமான தேவைகளும் முழுமையாக திருப்த அளிக்கிறது என Raimund Bruhin கூறினார்.

மொத்தம் 8.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்து, மூன்று உற்பத்தி நிறுவங்களுடன் சுமார் 15.8 மில்லியன் டோஸ்களை பெற ஒப்பந்தம் செய்துள்ளது.

Pfizer/BioNTech தடுப்பூசி சுமார் மூன்று மில்லியன் டோஸ், மாடர்னாவின் தடுப்பூசி 7.5 மில்லியன் டோஸ் மற்றும் AstraZeneca தடுப்பூசி சுமார் 5.3 மில்லியன் டோஸ் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்