சுவிட்சர்லாந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு! மருத்துவ குழு சொன்ன மகிழ்ச்சி செய்தி

Report Print Santhan in சுவிற்சர்லாந்து
504Shares

சைபர் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசின் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

உலகில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதில் ஒரு சில நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டி கொண்டு வரப்பட்டுவிட்டது.

அந்த தடுப்பூசியின் பெயர் பைசர் நிறுவனத்தின் உடையது எனவும் இந்த தடுப்பு மருந்துகள் அலர்ஜியை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக ஸ்விட்சர்லாந்து மருத்துவக் குழு நடத்திய ஆய்வில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுவிட்சர்லாந்து மருத்துவக் குழு வெளியிட்ட அறிக்கையில், எங்களது சோதனை முடிவில் கொரோன தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. நல்ல பலனையும் தருகிறது என்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்