பிரித்தானியாவுக்கான விமானங்கள் அனைத்தியும் ரத்து செய்யுங்கள்: சுவிட்சர்லாந்தில் வலுக்கும் கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
274Shares

புதியவகை ஆபத்தான கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பரவுவதை கருத்தில் கொண்டு லண்டன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜேர்மனி, நெதர்லாந்து உட்பட முக்கிய ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியாவுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

அந்த பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இணையலாம் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளன. முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்த கோரிக்கையை அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

மட்டுமின்றி, புதிய கொரோனா தொற்றானது தடுப்பூசியால் கட்டுக்குள் வருமா என்பது தொடர்பில் உறுதியான பதில் இல்லாத நிலையில்,

ஒரு ஊரடங்கில் இருந்து தொடர்ந்து இன்னொரு ஊரடங்கு நோக்கி நாம் நகர்வது மிகவும் கொடுமையானது எனவும் தங்களது கவலையை பதிவு செய்துள்ளனர்.

மட்டுமின்றி, தற்போதைய சூழலில் சுவிட்சர்லாந்து நிர்வாகம் உடனடியாக பிரித்தானியாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டும்.

அல்லது விமான பயணத்திற்கு முன்னர் குறைந்தபட்சம் ஒரு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை தேவை. மேலும் பிரித்தானியாவில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பயணங்களையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சுவிஸ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்