எஞ்சியது இந்த வாகனமும் உடுத்தியிருந்த உடைகளும் மட்டுமே: சுவிஸில் பரிதாப நிலையில் கதறும் ஒரு குடும்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
980Shares

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடுத்தியிருந்த உடைகள் மட்டுமே மிஞ்சியதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரின் மகளே தற்போது பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் முடிவுக்கு வந்துள்ளார்.

துர்காவ் மண்டலத்தின் Guntershausen பகுதியில் திங்களன்று பகல் பட்டறையுடன் கூடிய குடியிருப்பு ஒன்று தீக்கிரையானது.

இந்த விபத்தில் பட்டறையும் குடியிருப்பும் மொத்தமாக சாம்பலானது. இழப்பு மட்டும் பல நூறு ஆயிரம் பிராங்குகளாக இருக்க வாய்ப்புள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த தீ விபத்தின் உண்மையான காரணம் தொடர்பில் விசாரிக்க தீயணைப்புதுறையும், மண்டல தடயவியல் துறையும் களமிறங்கியுள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் இருந்து எழுந்த நெடி 3 கி.மீ தொலைவில் உள்ள பகுதி வரை பரவியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பும் பட்டறையும் தீ விபத்தில் சிக்கிய நிலையில், தங்களின் உடைமைகள் எதையும் மீட்க முடியாமல் போனதாகவும்,

சம்பவத்தின் போது குடியிருப்பில் இருந்த பெற்றோர் உடுத்தி இருந்த உடையும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் வாகனம் மட்டுமே எஞ்சியதாக தெரிவித்துள்ளனர்.

இதுவரையான அனைத்து உழைப்பும் தீக்கிரையானதாக கூறும் அந்த குடும்பம், பண்டிகை நாட்களில் மொத்தமும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கண் கலங்கியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்