பிரித்தானியாவில் சிக்கி தவிக்கும் சுவிஸ் குடிமக்கள் இவ்வாறு செய்ய வேண்டும்! அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Basu in சுவிற்சர்லாந்து
226Shares

நாடு திரும்ப முடியாமல் பிரித்தானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் சிக்கி தவிக்கும் குடிமக்களுக்கு சுவிஸ் அரசாங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா-தென் ஆப்பரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல உலக நாடுகளை போலவே சுவிட்சர்லாந்தும் இரு நாடுகளுக்கு பயண தடை விதித்துள்ளது.

மேலும், டிசம்பர் 14 முதல் சுவிஸ் வந்துள்ள பிரித்தானியா-தென் ஆப்பிரிக்க சுற்றுலா பயணிகள், 10 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 14 முதல் கிட்டதட்ட 10,000 பிரித்தானியா சுற்றுலா பயணிகள் சுவிஸ் வந்துள்ளதாக அரசு மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், சுவிஸில் சிக்கி உள்ள பிரித்தானியா-தென் ஆப்பிரிக்கா குடிமக்கள் நாடு திரும்பும் வகையில் பயண தடையிலிருந்து தற்காலிக விலக்கு அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

அதே போல், பிரித்தானியா-தென் ஆப்பரிக்கா ஆகிய இரு நாடுகளில் சிக்கி தவிக்கும் தங்கள் குடிமக்களுக்கும் சுவிஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, இரு நாடுகளில் உள்ள சுவிஸ் குடிமக்கள் நாடு திரும்புவதற்கான தங்கள் பயணங்களை பதிவு செய்யுமாறு சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், ‘Travel Admin’மொபைல் செயலி வயிலாக தொர்பில் இருக்குமாறும், நாடு திரும்பும் பயணத்திற்காக அவர்களை தொடர்பு கொள்ள இந்த செயலி உதவும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நெருக்கடி மேலாண்மை மையத்தின் தலைவர் Hans-Peter Lenz கூறினார்.

எனினும், விமானங்களுக்கான செலவுகள் அரசால் செலுத்தப்படாது என Hans-Peter Lenz தெளிவுப்படுத்தினார்.

சுமார் 37,500 சுவிஸ் குடிமக்கள் பிரித்தானியாவில் வாழ்கின்றனர், 8,500-க்கும் குறைவானவர்கள் தென் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்