டாக்ஸியில் மரணமடைந்த புகலிடக் கோரிக்கையாளர்: சுவிஸில் நீதி கேட்டு போராடும் குடும்பத்தினர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
416Shares

சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில், உரிய நீதி கேட்டு குடும்ப உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை என உரிய நிர்வாகிகள் தெரிவித்தும், அதை ஏற்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மறுத்து வருகின்றனர்.

இருப்பினும், குறித்த விவகாரம் விசாரணையில் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பெர்ன் மண்டலத்தின் Lyss நகரில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான முகாம் ஒன்றில் இருந்தே இச்சம்பவம் வெளியாகியுள்ளது.

நவம்பர் 13 அன்று 41 வயதான புகலிடக்கோரிக்கையாளர் Sezgin Dağ உடல் நலக்குறவால் அவதிப்பட்டுள்ளார்.

ஆனால் அவருக்கு உரிய மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை என்றும், அதனாலையே அவர் மரணமடைந்ததாகவும் குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இதனிடையே, சம்பவத்தன்று பகல் அந்த நபர் மருத்துவமனை சென்று வந்ததை குடும்பத்தினரும் உரிய நிர்வாகிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதே நாள் இரவு மீண்டும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவே, ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளிப்பதற்கு பதிலாக Lyss நகரில் அமைந்துள்ள முகாம் நிர்வாகி டாக்ஸி வரவழைத்து, இவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே Sezgin Dağ மரணமடைந்துள்ளார். ஆம்புலன்ஸ் சேவையை அனுமதிக்காதன் காரணத்தை வினவிய குடும்பத்தாருக்கு,

சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கும் ஒருவருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டால், அந்த சூழலுக்கு ஏற்ப டாக்சியை அழைப்பதா அல்லது ஆம்புலன்ஸ் சேவையை அனுமதிப்பதா என்பதில் உரிய நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என நாட்டின் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான செயலகம் பதிலளித்துள்ளது.

மேலும், Lyss நகர புகலிடக் கோரிக்கையாளர்கள் முகாம் நிர்வாகியின் செயலை SEM நிர்வாகிகள் தரப்பு பாராட்டியும் உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்