சுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் கொரோனா விதிகள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
1117Shares

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுவிட்சர்லாந்து மீண்டும் கொரோனா விதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இன்று முதல் உணவகங்கள், மதுபான விடுதிகள், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூடப்படவேண்டும் என்றும், அவை குறைந்தபட்சம் ஜனவரி 22 வரை மூடப்பட்டிருக்கவேண்டும் என்றும் பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போதுகூட இந்த கட்டுப்பாடுகளுக்கு விதிவிலக்கு கிடையாது.

என்றாலும், உணவு முதலாவனற்றை வாங்கிச் செல்லவும், ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் அலுவலகங்களில் உள்ள உணவகங்கள் தொடர்ந்து செயல்படலாம்.

கடைகள் திறக்கப்படலாம், ஆனால் கடைகளின் அளவைப் பொருத்து வாடிக்கையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படவேண்டும்.

மேலும், எந்தெந்த மாகாணங்களில் R எண் 1க்கு கீழ் உள்ளதோ, அங்கு உணவகங்களும் மதுபான விடுதிகளும் திறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset.

ஆனால், எப்போது R எண் 1ஐ விட அதிகரிக்குமோ, அப்போது உணவகங்களும் மதுபான விடுதிகளும் மூடப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அவர்.

பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது, ஆனால், எல்லா இடங்களிலும் மக்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதுடன், மாஸ்க் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படவேண்டும்.

அனைத்து மாகாணங்களும் தங்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்கவும், கொரோனா பரிசோதனை செய்யவும், நோய் தொற்றியவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராக இருக்கவேண்டும். டிசம்பர் 13 அன்று விதிக்கப்பட்ட மற்ற விதிகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்