முதற்கட்டமாக Pfizer/BioNTech உருவாக்கிய தடுப்பூசியின் 1,07,000 டோஸ்கள் சுவிஸ் வந்தடைந்துள்ளன.
Pfizer/BioNTech தடுப்பூசிக்கு கடந்த சனிக்கிழமையன்று சுவிஸ்மெடிக் ஒப்புதல் அளித்தது.
சுவிஸ் 3 மில்லியன் Pfizer/BioNTech தடுப்பூசி டோஸ்கள் பெற ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் முதற்கட்டமாக 1,07,000 டோஸ்கள் வந்தடைந்துள்ளன.
மேலும் 2,50,000 டோஸ்களை ஜனவரி மாதத்தில் இரண்டு கட்டமாக பெற சுவிஸ் திட்டமிடப்பட்டுள்ளது.
107,000 டோஸ் Pfizer/BioNTech தடுப்பூசி பாதுகாப்பாக வழங்கப்பட்டிருப்பதை சுவிஸ் இராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார், மேலும் அவை பரிசோதிக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்ப தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

தடுப்பூசி, -70 டிகிரி செல்சியஸில் சேமிக்கப்பட வேண்டும், உள்ளூர் அரசாங்கங்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்பு முதலில் ஆயுதப்படை மருந்தகத்தில் வைக்கப்படும், இந்த தடுப்பூசி குப்பிகளை குளிர்சாதன பெட்டிகளில் அதிகபட்சம் ஐந்து நாட்கள் சேமிக்க முடியும் என சுவிஸ் இராணுவ செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்தார்.
மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகள் டிசம்பர் 23 புதன்கிழமை முதல் 65 வயதிற்கு மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசி போடும் ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கும். தடுப்பூசி பற்றி மக்களுக்கு தெரிவிக்க, தேசிய பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இதுவரை அங்கீகரிக்கப்படாத மாடர்னா மற்றும் AstraZeneca தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தங்கள் உட்பட, சுவிட்சர்லாந்து சுமார் 8.5 மில்லியன் மக்களுக்கு 15 மில்லியன் டோஸ்களை ஆர்டர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.