சுவிட்சர்லாந்திலிருந்து நாடு திரும்ப பிரித்தானிய பயணிகளுக்கு அனுமதி: ஆனால் அனைவருக்கும் அல்ல!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இருக்கும் பிரித்தானியர்கள் நாடு திரும்புவதற்காக, இன்று விமான பயணத்தை அனுமதிக்க இருப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. ஆனால், அது அனைவருக்குமானது அல்ல!

பிரித்தானியாவில் புதுவகை கொரோனா வைரஸ் ஒன்று பரவத் தொடங்கியதையடுத்து, ஞாயிறு முதல் சுவிட்சர்லாந்து பிரித்தானியாவுடனான விமான சேவையை காலவரையறையின்றி நிறுத்தியது.

அறிவிக்கப்பட்ட அந்த விதிகள் இன்னமும் நடைமுறையில் இருக்கும் நிலையில், இன்று முதல் சுவிஸ் வாழிட உரிமை பெற்ற பிரித்தானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருப்போர் சுவிட்சர்லாந்து திரும்பவும், பிரித்தானியா அல்லது தென் ஆப்பிரிக்காவில் வாழிட உரிமை பெற்றோர் தற்போது சுவிட்சர்லாந்திலிருக்கும் பட்சத்தில் அவர்களும் நாடு திரும்பும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் விமானங்களுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது.

அபாய பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருவோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

யாரெல்லாம் பிரித்தானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்?

சுவிஸ் குடிமக்கள் (Liechtenstein குடிமக்கள் உட்பட). சுவிஸ் வாழிட உரிமம் அல்லது சுவிஸ் D வகை விசா வைத்திருப்போர். ‘laisser passer’ வகை பயண ஆவணம் வைத்திருப்போர் ஆகியோர்.

சுவிஸ் தனிமைப்படுத்தல் விதிகள் என்னென்ன?
  • தனிமைப்படுத்த அவசியம் உள்ளவர்கள் தங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
  • சுவிட்சர்லாந்துக்குள் வந்து இரண்டு நாட்களுக்குள் மாகாண சுகாதார அதிகாரிகளிடம் உங்கள் வருகை குறித்து தெரியப்படுத்தவேண்டும்.
  • உங்களிடம், உங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் பரிசோதனை செய்ததற்கான ஆதாரம் இருந்தாலும், நீங்கள் 10 நாட்களுக்கு உங்களை தனிமைப்படுத்தித்தான் ஆகவேண்டும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்