சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்கள்... கட்டாய தனிமைப்படுத்தலால் இரவோடு இரவாக செய்த செயல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
312Shares

விடுமுறை நாட்களை இனிமையாக கழிக்கலாம் என்ற கனவுடன் சுவிட்சர்லாந்துக்கு சென்ற பிரித்தானியர்கள், அங்கு கட்டாயத்தனிமைப்படுத்தலுக்குள்ளாக நேர்ந்ததால், இரவோடு இரவாக அங்கிருந்து தப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுற்றுலா வந்த இடத்தில் தனிமைப்படுத்தவேண்டும் என்ற எதிர்பாராத சூழல் ஏற்பட்டதையடுத்து, சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் சிக்கிக்கொண்ட 420 பிரித்தானியர்களில் 200 பேர் இருளை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு இரவோடு இரவாக அங்கிருந்து வெளியேறியுள்ளதாக உள்ளூர் பத்திரிகையான SonntagsZeitung தெரிவித்துள்ளது.

வழக்கமாக, பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளின் வரவால் சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்கள் நிரம்பி வழியும்.

ஆனால், இங்கிலாந்தில் வேகமாக பரவிவரும் தீவிர கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விமான சேவைக்கு தடைவிதிக்கப்பட்டதால், இம்முறை ரிசார்ட்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை நம்பி வேலையில் இறங்குவோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

சுவிஸ் அரசு விமான சேவைக்கு தடை விதித்ததோடு, பிரித்தானியாவிலிருந்து டிசம்பர் 14 அன்றும் அதற்குப் பின்பும் வந்தவர்கள் மற்றும் வருபவர்களுக்கு 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலையும் அறிவித்துள்ளதால் அவர்கள் நிலைமை நிலைமை மோசமாகிவிட்டது.

சுவிட்சர்லாந்தின் Verbier கிராமத்திற்கு சென்ற பிரித்தானியர்களில் சிலர் உடனடியாக பிரித்தானியாவுக்கு திரும்பிவிட, மற்றவர்கள் அங்கு சிக்கிக்கொண்டார்கள்.

பலரும் வேறு வழியின்றி தனிமைப்படுத்துதலுக்கு சென்ற நிலையில், ஒரு நாள் தனிமைப்படுத்தலுக்குப் பின், யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக அவர்கள் வெளியேறிவிட்டார்கள் என்கிறார் Bagnes முனிசிபல் செய்திதொடர்பாளரான Jean-Marc Sandoz.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்