கொரோனாவால் தந்தை இறக்க நானே காரணம்: கண்ணீர் விட்டு கதறும் சுவிஸ் இளம்பெண்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
17352Shares

சுவிட்சர்லாந்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு தமது தந்தையை இழந்த இளம்பெண் ஒருவர், அதற்கு தாமே உண்மையான காரணம் என கதறியுள்ளார்.

குறித்த இளம்பெண் கொரோனா தொடர்பான சுகாதாரம் குறித்து எந்த அக்கறையும் எடுத்துக் கொண்டதில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி கொரோனா பாதிப்பு என்பது, வெறும் காய்ச்சல் போன்றதே, அதை பெரிது படுத்த தேவை இல்லை என்றே கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நண்பர்களுடனான விருந்து கொண்டாட்டங்களில் இருந்தே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மட்டுமின்றி கொரோனாவின் பல அறிகுறிகள் அவரில் காணப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், கொரோனா பாதிப்பு என்பது உண்மையில் வெறும் காய்ச்சல் அல்ல என தமது நண்பர்களுக்கு அறிவுரை வழங்கத் தொடங்கியுள்ளார்.

இதனிடையே, அவரிடம் இருந்து கொரோனா பாதிப்பு அவரது தந்தைக்கு பரவியுள்ளது.

மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சுமார் 2 வாரத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

தற்போது தமது அறியாமை காரணமாகவே, தந்தையும் கொரோனாவுக்கு பலியானதாக அவர் குற்ற உணர்ச்சியால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில், தமது தந்தையிடம் மன்னிப்பு கோரியதாகவும், ஆனால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டதற்கு தமது மகளை குற்றம் காண முடியாது என்றே அவர் கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்