சுவிஸில் கொரோனாவுக்கு பலியான இளைஞர்: மறுப்பு தெரிவித்த மண்டல நிர்வாகம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானதை பெடரல் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ள நிலையில் சூரிச் மண்டல நிர்வாகம் மறுத்துள்ளது.

கொரோனா பரவக் தொடங்கிய நாள் முதல், அது முதியவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும், அவர்களின் உயிருக்கே அதிக அச்சுறுத்தல் எனவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது சுவிஸில் 29 வயதான இளைஞர் ஒருவரும் 9 வயதான சிறுவனும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக பெடரல் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 21 மற்றும் 27 ஆம் திகதிக்குள் இந்த இரு மரணங்களும் பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

9 வயது சிறுவன் St. Gallen மண்டலத்திலும் 29 வயது இளைஞர் சூரிச் மண்டலத்திலும் வசிப்பவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது உருமாற்றமடைந்து அதிக வீரியத்துடன் காணப்படும் கொரோனா பெருந்தொற்றினால் இளையோருக்கும் அச்சுறுத்தல் என கூறப்படுகிறது.

இருப்பினும் இதுவரை உலகெங்கிலும் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில் கொரோனாவுக்கு பலியானவர்களில் இளையோரின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றே தெரிய வந்துள்ளது.

கடந்த மே மாதம் ஆர்காவ் மண்டலத்தில் தீவிர நரம்பியல் நோயால் அவதிப்பட்டுவந்த குழந்தை ஒன்று, கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.

தற்போது சூரிச் மண்டலத்தில் இளைஞர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதும்,

குறிப்பிட்ட காரணங்களால், உண்மை தகவலை வெளியிட மண்டல நிர்வாகம் மறுத்து வருவதாகவே கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்