சுவிஸ் மண்டலம் ஒன்றில் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் அபாயம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
457Shares

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் மண்டலம் மிக உயர்ந்த கொரோனா எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் லூசர்ன் மண்டலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என்றே நம்பப்படுகிறது.

கடந்த டிசம்பர் 20 அன்று லூசர்ன் மண்டலத்தில் கொரோனா எச்சரிக்கை மிக உயர்ந்த நிலையில் காணப்பட்டது.

அதன் பின்னர் ஆரஞ்சு எச்சரிக்கை நிலை ஞாயிற்றுக்கிழமை வரை நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 3 ம் திகதி வெளியாக தகவலில், புதிதாக 146 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதுடன், சிகிச்சை பலனின்றி 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மொத்தமுள்ள 49 அவசர சிகிச்சைக்கான படுக்கைகளில் இதுவரை 43 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன.

அதிர்வரும் நாட்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை எனில், லூசர்ன் மண்டலத்தில் மருத்துவமனைகள் மொத்தம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்