சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
1250Shares

சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக அதிகாரிகள் இன்று கூடி விவாதிக்க உள்ளார்கள்.

ஊடகங்களின் கருத்துப்படி, கொரோனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாதம் இறுதிவரை நீட்டிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

சுவிஸ் பெடரல் கவுன்சில் 2021ஆம் ஆண்டில் முதன்முறையாக இன்று கூட உள்ளது. கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள முதல் விடயமே, சுவிட்சர்லாந்தின் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்ததுதான்.

இந்த கொரோனா கட்டுப்பாடுகளில் உடற்பயிற்சி மையங்கள், உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்படுதலும் உள்ளடங்கும்.

சுவிஸ் பத்திரிகையான Tages Anzeiger வெளியிட்டுள்ள செய்தியின்படி, சுகாதாரத்துறை அமைச்சர் Alain Berset, கொரோனா கட்டுப்பாடுகளை பிப்ரவரி மாத இறுதிவரை நீட்டிப்பதற்கு ஆதரவாக இருப்பதாகவும், இந்த கட்டுப்பாடுகளை அனைத்து மாகாணங்களும் பின்பற்றவேண்டும் என்பதை அவர் உறுதிசெய்துகொள்ள விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.

கட்டுப்பாடுகளில் ஒரு முக்கிய மாற்றம் என்னவென்றால், இதுவரை முன்மாதிரி மாகாணங்கள் என அழைக்கப்பட்ட மாகாணங்களுக்கு கூட, அதாவது கொரோனா பரவல் வீதம் குறைவாக உள்ள மாகானங்களுக்குக் கூட, இனி விதிமுறைகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படாது என்பதுதான்.

ஆக, இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில், அத்தியாவசியமற்ற கடைகள் மூடல், வீடுகளிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயம் மற்றும் பள்ளிகள் மூடல் ஆகிய விடயங்களும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்