சுவிட்சர்லாந்தில் வன்முறையை தூண்டும் வகையில் பதாகை ஏந்திய கால்பந்து ரசிகர்கள் 6 பேர் மீது தற்போது குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மே மாதம் Schaffhausen மற்றும் Winterthur கால்பந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போதே தொடர்புடைய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதில் Schaffhausen அணி ரசிகர்கள் ஏந்திய பதாகை வன்முறையை தூண்டுவதாகவும், பெண்களை இழிவு படுத்துவதாக அமைந்தது எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தற்போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேர் மீது பொதுமக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக கூறி வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபணமானால் தொடர்புடைய 6 பேருக்கும் தலா மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.