அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் திட்டமிட்டு செய்த ஒரு சதிதான் கொரோனா: நீதிமன்றத்தில் வாதிட்ட நபருக்கு நேர்ந்த கதி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
186Shares

கொரோனா என்பது, அரசியல்வாதிகளும் வியாபாரிகளும், இராணுவ அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு செய்த ஒரு சதி என்று சூரிச் நீதிமன்றத்தில் வாதிட்டார் ஒருவர்.

Naim Rashiti என்ற சூரிச்சைச் சேர்ந்த அந்த நபர், மாஸ்குகள் அணிவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்றும், மாஸ்க் ஒருவர் மேல் ஒருவருக்கு பயத்தை ஏற்படுத்தி அவர்களை நோயாளியாக்கும் என்றும் வாதிட்டார்.

அவரது வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்து 22 பக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது சூரிச் நீதிமன்றம்.

அத்துடன், அவருக்கு 4,695 சுவிஸ் ப்ராங்குகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் கண்டு தனக்கு குமட்டிக்கொண்டு வருவது போல் உள்ளது என்று கூறியுள்ள Rashiti, பெடரல் நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்