சுவிஸ் எல்லையில் மாயமான இளம்பெண்: புகைப்படம் வெளியிட்டு உதவி கோரும் குடும்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
488Shares

சுவிஸ் எல்லையில் மாயமான இளம்பெண் தொடர்பில் கடந்த 100 நாட்களாக எந்த தகவலும் இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஜேர்மானியரான 27 வயது Scarlett கடந்த செப்டம்பர் 10 முதல் மாயமாகியுள்ளார். சுவிஸ் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் வைத்தே அவர் மாயமானதாக நம்பப்படுகிறது.

கடைசியாக ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கும் நிலையில், அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் அவரது முகம் பதிவாகியுள்ளது.

ஆனால் அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது தொடர்பில் எந்த தகவலும் இல்லை. மலையேறுவதில் ஆர்வம் கொண்ட Scarlett, அதன் ஒருபகுதியாக பயணம் மேற்கொண்ட நிலையிலேயே மாயமாகியுள்ளார்.

தற்போது Scarlett-ன் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் இணைந்து ஒரு பேஸ்புக் பக்கம் ஒன்றை துவங்கி உதவி கோரியுள்ளனர்.

தற்போது உலகின் பல மூலைகளில் இருந்தும் பலர் உதவ முன்வந்துள்ளதாக Scarlett-ன் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பொலிசார், ஹெலிகொப்டர், மோப்ப நாய் குழு, ஆளில்லா விமானம் உள்ளிட்ட பல்வேறு தேடுதல் நடவடிக்கைகளில் இதுவரை ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறியுள்ள அவர்கள் தற்போது தேடுவதை நிறுத்தியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்