சுவிட்சர்லாந்தின் லூசர்ன் மண்டலத்தில் சுமார் எட்டரை மணி நேரத்தில் 20 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் 10 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பொருட்சேதம் சுமார் 100,000 பிராங்குகள் எனவும் தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, மாலை 3:30 மணி முதல் நள்ளிரவு வரை லூசர்ன் மண்டலம் முழுவதும் சுமார் 20 சாலை விபத்துக்கள் நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சாலை விபத்துக்களில் பலருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.