ஒரே ஒரு பிரித்தானிய சுற்றுலாப்பயணி கொண்டுவந்த திடீர்மாற்றம் பெற்ற பிரித்தானிய வகை கொரோனா வைரஸால் சுவிட்சர்லாந்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Mendrisio என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு முதியோர் இல்லத்தில், மூன்றில் இரண்டு பங்கு முதியோர்களும், பணியாளர்களில் பாதி பேரும் இந்த பிரித்தானிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த இல்லத்திற்கு தற்போது பார்வையாளர்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், இதுவரை 120 பேர், பயங்கரமாக பரவக்கூடியது என கருதப்படும் பிரித்தானிய வகை திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் Wengen என்ற பகுதியில் அமைந்துள்ள மலை ரிசார்ட் ஒன்றில் இருந்தவர்களும் அடக்கம்.
அங்கு வந்த பிரித்தானிய சுற்றுலாப்பயணி ஒருவர்தான் அந்த வைரஸை கொண்டுவந்ததாக கருதப்படுகிறது.