புதிய வீரியம் மிக்க கொரோனா: தனிமைப்படுத்தல் விதிகளை இறுக்கமாக்கிய சுவிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
422Shares

சுவிட்சர்லாந்தில் புதிய வீரியம் மிக்க கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்துறை தனிமைப்படுத்தல் விதிகளை இறுக்கமாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாற்றம் பெற்ற புதிய வீரியம் மிக்க ஆபத்தான கொரோனா பரவல் பல நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மட்டுமின்றி தற்போது பிரேசில் தொடர்பில் மூன்றவாவது வகை கொரோனா தொற்று குறித்தும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாற்றம் பெற்ற கொரோனா தற்போது புழக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாது என்ற தகவலும் பகீர் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் சுவிஸ் சுகாதாரத்துறை, கொரோனா தனிமைப்படுத்துதல் தொடர்பில் முக்கிய மாறுதல்களை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.

இனிமுதல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமின்றி,

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தலுக்கு கண்டிப்பாக உட்படுத்தப் பட வேண்டும்.

முதலில் நேரடித் தொடர்பு கொண்ட நபர்கள் மட்டுமே தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டால் போதுமானது.

இந்த புதிய தனிமைப்படுத்துதல் விதிகளை பெர்ன் மண்டலம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து Vaud மண்டல சுகாதாரத்துறையும் புதிய தனிமைப்படுத்துதல் விதிகளை கடைபிடிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பெரும்பாலான மண்டலங்களில் இந்த புதிய தனிமைப்படுத்துதல் விதி உடனடியாக அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்