சுவிஸில் பாடசாலை சிறார் இருவர் கொடூர மரணம்: தாயாரை கைது செய்த பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
1375Shares

சுவிட்சர்லாந்தின் சோலோத்தர்ன் மண்டலத்தில் பாடசாலை சிறார் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சோலோத்தர்ன் மண்டலத்தின் Gerlafingen பகுதியில், குடியிருப்பு ஒன்றில் பாடசாலை சிறார்கள் இருவர் மரணமடைந்துள்ள தகவல் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

சனிக்கிழமை பகல் சுமார் 9.20 மணியளவில் கிடைத்த தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை குறிப்பிட்ட குடியிருப்பில் இருந்து சிறார்களின் சடலங்களை மீட்டுள்ளனர்.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், காவல்துறையினர் இதை வன்முறைக் குற்றமாக கருதுகின்றனர்.

இதனையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார், மரணமடைந்த சிறார்களின் தாயாரை கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி இச்சம்பவம் தொடர்பில் விரிவான மற்றும் விரைவான நடவடிக்கைகளுக்கு மண்டல பொலிசார் ஆணை பிறப்பித்துள்ளனர்.

பழகுவதற்கு அருமையான குடும்பம் என்றே அக்கம் பக்கத்தினரால் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, கணவரை பிரிந்து, தமது இரு பிள்ளைகளுடன் அந்த தாயார் தனித்தே வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சுமார் 45 குடியிருப்புகள் கொண்ட புதிய வளாகம் அது என்றே கூறப்படுகிறது. இச்சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்