ஒரே ஒரு நாட்டில் இருந்து சுவிஸ் வங்கிகளில் குவிந்துள்ள பில்லியன் கணக்கிலான பணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
1436Shares

தென் அமெரிக்க நாடான வெனிசுலா தொடர்புடைய சுமார் 10 பில்லியன் டொலர் தொகையானது பல்வேறு சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான வகையில் பெரும் தொகையை சுவிஸ் வங்கிகளில் சேமிக்கும் நாடுகளில் வெனிசுலா முதன்மையாக உள்ளது என கூறப்படுகிறது.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் 2019-ல் இருந்தே விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

வெனிசுலாவில் முறைகேடு செய்யப்பட்ட பணமே சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வங்கிகளில் நூற்றுக்கணக்கான கணக்குகளில் இந்த 10 பில்லியன் டொலர் தொகையானது சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை இறுகும் நிலை ஏற்பட்டால், சுவிட்சர்லாந்தில் 8-ல் ஒரு வங்கி கண்டிப்பாக சிக்கலை எதிர்கொள்ளும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்