ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்... விலகாத மர்மம்: 3 முக்கிய கோரிக்கை வைத்த சுவிஸ் பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
211Shares

சுவிட்சர்லாந்தின் துன் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் மண்டல பொலிசார் மீண்டும் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பெர்ன் மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமை துன் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் மர்மம் விலகாமல் பொலிசார் தடுமாறி வருகின்றனர்.

லண்டன் இசைக்குழு ஒன்றின் பெயரை கழுத்துப்பகுதியில் பச்சைக்குத்தியுள்ள குறித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட எந்த அடையாளமும் பொலிசாருக்கு இதுவரையான விசாரணையில் கிடைக்கவில்லை.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்துள்ள பொலிசார், ஆனால் கொலைகாரன் யார் என்பது தொடர்பில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக மட்டுமே தெரிவித்துள்ளனர்.

தற்போது 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Gunten தொடங்கி Merligen வரையான ஏரிப்பகுதியில் மாலை நேரம் அல்லது இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏதேனும் வாகன நடமாட்டம் இருந்தனவா?

Gunten தொடங்கி Merligen வரை ஏரியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சம்பவம் பார்வையில் பட்டதா?

கடந்த சில நாட்களில் எப்போதேனும் safety footplate மாயமானதாக எவரேனும் கவனித்ததுண்டா? என மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் safety footplate-கு தொடர்பு இருப்பதாக மண்டல பொலிசார் நம்புகின்றனர்.

மட்டுமின்றி, அந்த பெண்ணின் சடலத்துடன் அந்த safety footplate இணைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 800 குடியிருப்பாளர்களை கொண்ட Gunten கிராமம், ஏரியில் பெண்ணின் சடலம் கண்டெடுத்த விவகாரம் தொடர்பில் அதிர்ச்சி விலகாமல் உள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்