சுவிட்சர்லாந்தில் வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆசிய நாட்டு புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
429Shares

பல நேரங்களில் நாம் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிப்பதுண்டு...

அப்படி நாம் அனுப்பும் விண்ணப்பங்களுக்கு என்ன நேரிடுகிறது என்பது தெரியாமலே நேர்காணல் அழைப்பு வரும், அல்லது வெளிநாட்டு வேலைகளைப் பொருத்தவரை அழைப்பாவது வரும் என நாம் காத்திருப்போம்.

அப்படி சுவிட்சர்லாந்தில் வேலை கோரி இணையத்தில் நாம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு என்ன நடக்கிறது? நாம் இணையத்தில் அளிக்கும் விண்ணப்பம் வேலை தருபவரை போய்ச் சேரவேண்டும் அல்லவா? அது எப்படி போய்ச் சேரும்? அதை ஆய்வு செய்தபோது, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா முதலான நாடுகளில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இரண்டு பிரபல சுவிஸ் நிறுவனங்கள், மிகுந்த பொருட்செலவில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. அந்த ஆய்வில், புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மை இனத்தோர் வேலை கோரி விண்ணப்பிக்கும்போது, அவர்கள் மற்றவர்களைவிட 4 முதல் 19% குறைவாகவே வேலை கொடுப்போரால் நேர்காணலுக்கு அழைக்கப்படுவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, அப்படி பாதிக்கப்படுபவர்கள், ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா முதலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற ஏமாற்றமளிக்கும் செய்தி அந்தஆய்வின் முடிவுகளிலிருந்து கிடைத்துள்ளது.

காரணம், நம்மிடம் விண்ணப்பங்களை பெறும் இணையதளங்கள், அவற்றில் எத்தனை விண்ணப்பங்களை வேலை கொடுப்போருக்கு காட்டுகிறதோ, அதன் அடிப்படையில்தான் அவர்கள் நம்மை நேர்காணலுக்கே அழைப்பார்கள்.

நம் விண்ணப்பங்களை அந்த இணையதளங்கள் வேலை கொடுப்போருக்கு காட்டப்படாத பட்சத்தில், அவர்கள் நம்மை எப்படி அழைப்பார்கள்? அத்துடன், வேலை கொடுப்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்காத நேரமான மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெளிநாட்டவர்களின் விண்ணப்பங்கள் அவர்கள் முன் வைக்கப்படுகிறதாம்.

இதனால் வேலை கொடுப்பவர்கள் முன் வைக்கப்படும் கொஞ்சம் விண்ணப்பங்களிலும், வேண்டாவெறுப்பாக அவசர அவசரமாக அவர்கள் இந்த விண்ணப்பங்களை பார்த்து ஆட்களை தேர்வு செய்வதும், நம் நாட்டவர்களின் விண்ணப்பங்கள் அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாததற்கு ஒரு காரணமாக உள்ளதாம்.

இதை கண்டுபிடித்துச் சொன்னது, ஆசிய நாட்டவர்களோ அல்லது ஆப்பிரிக்க நாட்டவர்களோ அல்ல, சுவிஸ் ஆய்வாளர்கள்தான் என்பதை கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்!

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்