சுவிட்சர்லாந்து எல்லைக்குள் நுழைய யாருக்கெல்லாம் அனுமதி?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
290Shares

சுவிட்சர்லாந்தின் எல்லையை நான்கு நாடுகள் பகிர்ந்துகொள்ளும் நிலையில், எந்தெந்த நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்துக்குள் நுழைய அனுமதி உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது.

ஜேர்மனி

ஜேர்மனியைப் பொருத்தவரை சமீபத்தில்தான் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் எல்லை கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக சுவிட்சர்லாந்துடன் பேசவேண்டும் என்று கூறியிருந்தார். இப்போது வரை இரு நாடுகளுக்கும் இடையில் மக்கள் போய் வந்துகோண்டுதான் இருக்கிறார்கள்.

சுமார் 34,000 பணியாளர்கள் ஜேர்மனியிலிருந்து எல்லை தாண்டி சுவிட்சர்லாந்தில், குறிப்பாக பேஸல் பகுதியில் பணியாற்றிவருகிறார்கள்.

ஜேர்மானியர்களுக்கு சுவிட்சர்லாந்துக்கு வர அனுமதி உள்ளது, ஆனால், அவர்கள் Saxony மற்றும் Thuringia மாகாணங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால், பிப்ரவரி 1ஆம் திகதி முதல் அவர்கள் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும்.

இத்தாலி

இந்த வார துவக்கத்தில், Ticino மாகாண அதிகாரிகள் சுவிஸ் இத்தாலி எல்லையில் சோதனைகளை அறிமுகம் செய்யவேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

சுமார் 70,000 பணியாளர்கள் இத்தாலியிலிருந்து Ticino மாகாணத்துக்கு தினமும் பணி செய்வதற்காக வந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தும் எல்லைகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்யுமாறு அதிகாரிகள் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

ஆனால், சுவிட்சர்லாந்துக்கு நெருக்கமாக உள்ள Lombardia மற்றும் Piemonte ஆகிய இத்தாலிய நாட்டுப் பகுதிகளில் உள்ளவர்கள் எந்த தடையுமின்றி சுவிட்சர்லாந்துக்குள் வரலாம்.

அதே நேரத்தில், Emilia Romagna, Friuli Venezia Giulia, மற்றும் Veneto ஆகிய பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்து வரும் மக்கள் பிப்ரவரி 1 முதல் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும்.

பிரான்ஸ்

பிப்ரவரி 1 முதல் சுவிட்சர்லாந்துக்கு வரும் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Alpes-Côte d'Azur பகுதியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருவோர் பிப்ரவரி 1 முதல் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும்.

ஆஸ்திரியா

பொதுவாக, ஆஸ்திரியா நாட்டவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தால் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

ஆனால், Salzburg பகுதியிலிருந்து வருவோர் மட்டும் பிப்ரவரி 1 முதல் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்