கத்தை கத்தையாக பணத்துடன் இத்தாலி எல்லையில் சிக்கிய சுவிஸ் பெண்மணி! மொத்தம் எவ்வளவு ரூபாய் இருந்தது தெரியுமா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
425Shares

சுவிஸ் பெண்மணி ஒருவர் இத்தாலிக்கு கடத்தவிருந்த கத்தை கத்தையான பணத்தை Chiasso-Brogeda எல்லையில் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சுவிஸ் பெண்மணியிடம் இருந்து இத்தாலிய பொலிசார் கண்டெடுத்த மொத்த தொகை 226,020 பிராங்குகள்(இலங்கை மதிப்பில் 5,05,13,869 கோடி ரூபாய்) என கூறப்படுகிறது.

கணக்கில் வராத இந்த தொகை தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

சம்பவத்தின் போது வழக்கமான வாகன சோதனையில், குறித்த பெண்மணி சென்ற காருக்குள் பணம் எண்ணும் இயந்திரம் ஒன்று பொலிசாரின் பார்வையில் விழுந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகமடைந்த பொலிசார், உடனடியாக அவரது வாகனத்தை சோதனையிட்டதில், பதுக்கி வைக்கப்பட்ட கத்தை கத்தையான பணத்தாள்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து, அந்த தொகையில் இருந்து 50 சதவீதத்தை பொலிசார் பறிமுதல் செய்ததுடன், தீவிர விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்