சுவிஸ் இளைஞர்களில் அதிகரிக்கும் மனச்சோர்வு: புதிய ஆய்வில் வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இளைஞர்களில் மனச்சோர்வு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் சுமார் 20 சதவீத இளைஞர்கள் மனச்சோர்வு தொடர்பான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உளவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

வெளியே எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்லும் கட்டாயம், குறிப்பிட்ட நண்பர்களுடன் மட்டுமே சந்திப்பு,

நாளுக்கு நாள் வெளியாகும் கொரோனா தொடர்பிலான கலங்க வைக்கும் தகவல்கள் என இளைஞர்கள் மனதளவில் பாதிக்கப்பட இவைகள் முதன்மை காரணமாக கூறப்படுகிறது.

இதுவரை சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 8,000 பேர் இறந்துள்ள நிலையில்,

அதன் தாக்கம் சமூகத்தில் மொத்தமாக அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம் ஊரடங்கின் போது சுமார் 9 சதவீத சுவிஸ் மக்கள் தாங்கள் மனச்சோர்வால் அவதியுறுவதாக வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால் மே மாதம் இந்த எண்ணிக்கை 12 சதவீதமாகவும், நவம்பர் மாதம் அது 18 சதவீதமாகவும் அதிகரித்தது.

14 முதல் 24 வயதுடைய சுவிஸ் இளைஞர்களிடமே அதிகமாக மனச்சோர்வு காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களில் வெறும் 6 சதவீதத்தினரே, மனச்சோர்வில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் குடியிருப்பிலேயே இருக்க நேரிடும் இளையோர்களை பெற்றோர்கள் அதிகம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நேரம் தூக்கத்தில் செலவிட விரும்புவதாகவும்,

உற்சாகமின்றி காணப்படுவதாகவும், இதன் உச்சகட்டத்தில், இளையோர்களுக்கு தற்கொலை எண்ணம் கூட வரலாம் என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்