துணிச்சலான முடிவு... சுவிஸில் காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை தெரியுமா? மலைக்க வைக்கும் கணக்கு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில் அமுலுக்கு கொண்டுவந்த முதல் ஊரடங்கால் காப்பாற்றப்பட்ட உயிர்களின் கணக்கு தற்போது வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த டிசம்பர் முதல் விதிவிலக்குய்டன் கூடிய ஊரடங்கு அமுலில் இருந்து வருகிறது.

உணவகங்கள், திரையரங்குகள், அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யாத கடைகள் என மக்கள் கூடும் வணிகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

ஆனால் அரசின் இந்த நடவடிக்கைகளால் பெருவாரியான மக்கள் அவதிப்பட்டும் வருகின்றனர்.

ஆனால் தற்போது, della Svizzera Italiana என்ற பல்கலைக்கழகமானது மேற்கொண்ட ஒரு ஆய்வில்,

சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட முதல் ஊரடங்கால் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்பட்டதாக மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வின் அடிப்படையில், கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரையான மாதங்களுக்கு இடையிலான முதல் ஊரடங்கு நடவடிக்கையால் 30,000 உயிர்கள் நேரடியாக காப்பாற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் அதிக நெருக்கடி ஏற்படாததால் கூடுதலாக 5,000 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

மட்டுமின்றி ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரும் முன்னர், அரசின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டதால் மேலும் 30,000 மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதனால், ஊரடங்கால் மட்டுமே சுவிட்சர்லாந்தில் மொத்தம் 65,000 மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, டிசினோ ஆராய்ச்சியாளர்கள் இதனால் ஏற்பட்ட பொருளாதார நன்மை குறித்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஒருவர் தமது ஆயுளை ஓராண்டு நீட்டிக்க எவ்வளவு தொகை செலவிட வேண்டும் என்பது தொடர்பில் கண்டறிந்துள்ளனர்.

அவ்வாறு சுவிஸ் குடிமகன் ஒருவர் தமது ஆயுளை ஓராண்டு நீட்டிக்க மொத்தம் 6.7 மில்லியன் பிராங்குகள் தோராயமாக செலவிட நேரிடும் என கண்டறிந்துள்ளனர்.

அந்த வகையில் சுவிஸ் பெடரல் அரசாங்கம் 100 பில்லியன் பிராங்குகள் பொருளாதார ஆதாயம் பெற்றுள்ளதாக டிசினோ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்