சுவிஸில் பிரசவத்திற்கு சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு: காரணம் கேட்டு நொறுங்கிய கணவன்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிஸில் கொரோனா சோதனைக்கு பயம் காரணமாக மறுப்பு தெரிவித்த நிறைமாத கர்ப்பிணிக்கு மருத்துவமனை நிர்வாகம் ஒன்று சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் வெளியாகியுள்ளது.

இதனால் இக்கட்டான சூழலில் வேறு மருத்துவமனையை அவசர அவசரமாக நாடவேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

இளம் தாயார் ஒருவர் தமது மூன்றாவது பிரசவத்தின் பொருட்டு கடந்த புதன்கிழமை கணவருடன் Schwyz மருத்துவமனையை நாடியுள்ளார்.

ஏற்கனவே பிரசவத்திற்கான திகதியும் தாண்டி 8 நாட்கள் கடந்துள்ளதாலும், கொரோனா நிலைமை காரணமாகவும் நாங்கள் பதட்டமாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருந்தோம் என தெரிவித்துள்ளார் குறித்த பெண்ணின் கணவர்.

இந்த நிலையில், செவிலியர் ஒருவர் குறித்த இளம் தாயாரை மகப்பேறு வார்டுக்கு அழைத்துச் சென்று அடுத்தக்கட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, கர்ப்பிணியின் மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் கொரோனா சோதனைக்கான மாதிரி எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் பயம் காரணமாக மூக்கில் இருந்து முடியாது என மறுத்த அந்த கர்ப்பிணி உமிழ்நீர் மாதிரியை எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துள்ளது. கொரோனா சோதனை இல்லாமல் பிரசவத்திற்கும் அனுமதிக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வேறு வழியின்றி அந்த நிறைமாத கர்ப்பிணியை அழைத்துக் கொண்டு வேறு மருத்துவமனையை நாடும் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டதாக அந்த கணவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 4 மணி நேரத்தில் Lachen மருத்துவமனையில் பிரசவம் நடந்ததாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் அந்த கணவர் கூறியுள்ளார்.

ஆனால் Schwyz மருத்துவமனை நிர்வாகம், தங்கள் செயலை சரி என வாதிட்டதுடன், தற்போதைய சூழலில் பாதுகாப்பு முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்