திடீரென சுவிட்சர்லாந்தில் சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு... காரணம் இதுதானாம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தில் திடீரென சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சுவிட்சர்லாந்தில் சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சைக்கிள் வாங்க விரும்புவோர் காத்திருக்கவேண்டிய ஒரு நிலைமையும் உருவாகியுள்ளது.

வியாபாரிகள் நாட்டில் சைக்கிள்கள் முற்றிலும் தீர்ந்துவிடும் ஒரு நிலைமை ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்கள்.

இப்படி திடீரென சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன? பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்தால் கொரோனா தொற்றலாம் என்ற அச்சத்தால், மக்கள் சைக்கிள் பயணத்துக்கு திரும்பியிருப்பதுதான் இந்த சைக்கிள் தட்டுப்பாட்டுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இன்னொரு பக்கம் சைக்கிள்கள் விலையும் உயர்ந்துள்ளது. சைக்கிள்கள் தட்டுப்பாடு இதற்கு ஒரு காரணம் என்பதுடன், கொரோனா பரவல் காரணமாக சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது.

ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு கண்டெய்னர்களில் சைக்கிள்களை கொண்டு வருவதற்கான கட்டணம் முன்பு 1,600 டொலர்களாக இருந்தது.

இப்போது அது ஒரேயடியாக, 11,000 டொலர்களாக அதிகரித்துள்ளது. ஆக, எல்லாவகையிலும் இந்த கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்