சுவிஸ் மக்கள் கடந்த ஓராண்டில் உணவுக்காக செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தில் 2020-ல் மட்டும் உணவு சில்லறை வர்த்தகம் ஏறக்குறைய 30 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸில் கடந்த 2020-ல் மட்டும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் உணவு மற்றும் பானங்களுக்காக பொதுமக்கள் அதிகமாக செலவிட்டுள்ளனர்.

2019-ஐ ஒப்பிடுகையில் இது 11.3% அதிகம் என கூறப்படுகிறது. மட்டுமின்றி, சராசரியாக ஒரு சுவிஸ் குடும்பம் உணவுக்காக மட்டும் 7,680 பிராங்குகள் செலவிட்டுள்ளனர்.

ஆனால், இணையம் வழியாக உணவுக்காக அவர்கள் செலவிட்ட தொகை இதில் சேர்க்கப்படவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், நுகர்வோர் தங்கள் உணவு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றில் ஒரு பங்கை புலால் உணவு வாங்குவதற்குப் பயன்படுத்தியுள்ளனர்,

ஆனால் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு கணிசமாக குறைவாக (14%) செலவிட்டனர் என தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, 10-ல் ஒரு சுவிஸ் பிராங்க் தொகையை ஆர்கானிக் பொருட்களுக்காக செலவிடப்பட்டுள்ளனர்.

மேலும், நகர்ப்புறவாசிகள் கிராமப்புறங்களில் வசிப்பவர்களை விட குறைவான அளவுக்கே இறைச்சி மற்றும் பால் பொருட்களை வாங்கியுள்ளனர்.

குழந்தைகளுடனான குடும்பங்கள் தங்கள் பட்ஜெட்டில் மிகப் பெரிய பங்கை இறைச்சி பொருட்களுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். குழந்தைகள் இல்லாதவர்கள் காய்கறிகள் மற்றும் மதுபானங்களுக்காக அதிகம் செலவிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்