சுவிஸில் ஒருவார காலமாக தேடப்படும் நபர்: பொதுமக்கள் உதவியை நாடிய பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் மாயமான நபர் தொடர்பில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

St. Gallen மண்டலத்தில் Sennwald பகுதியை சேர்ந்தவர் 41 வயதான Patrick Nüesch. இவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை 7ம் திகதி முதல் மாயமானவர்.

இவர் தொடர்பில் கடந்த ஒருவார காலமாக தீவிரமாக தேடியும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறும் பொலிசார்,

தற்போது பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். மட்டுமின்றி, குறித்த நபர் தொடர்ந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 170செ.மீ உயரம் கொண்ட அவர், சம்பவத்தன்று கருப்பு நிறத்தில் இராணுவ இருசக்கர வாகனம் ஒன்றில் பயணித்ததாகவும், அதன் பின்னர் எவ்வித தகவலும் இல்லை என கூறப்படுகிறது.

Patrick Nüesch தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாரை அணுக வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்