சுவிட்சர்லாந்தில் மகனுக்காக பனிவீடு கட்டிய தந்தை... எதிர்பாராமல் நிகழ்ந்த சோகம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தில் தனது 7 வயது மகனுக்காக பனிவீடு ஒன்றைக் கட்டிக்கொடுத்திருந்தார் ஒரு தந்தை.

சுவிட்சர்லாந்தின் Tarasp என்ற பகுதியில் கட்டப்பட்ட அந்த பனிவீட்டுக்குள் தந்தையும் மகனும் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் அந்த வீடு நிலைகுலைந்துள்ளது.

பனி முழுவதும் தந்தை மீதும் மகன் மீதும் சரிய, பனிக்குள் சிக்கியுள்ளனர் இருவரும்.

தந்தை எப்படியோ பனியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே வந்தால், மகனைக் காணவில்லை.

அவரும் மற்றொரு நண்பருமாக அந்த 7 வயது சிறுவனைத் தேட, சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகே அவர்களால் அவனைக் கண்டுபிடிக்கமுடிந்துள்ளது.

Image: Cantonal Police of Graubünden

அவர்கள் குழந்தைக்கு முதலுதவி செய்யும் நேரத்தில் மருத்துவ உதவிக்குழுவினரும் வந்து சேர, அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

ஆனால், மருத்துவர்களால் சிறுவனைக் காப்பாற்ற இயலவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image: Getty

Photo AFP

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்