சுவிட்சர்லாந்தின் பிரதான நகருக்குள் நுழைய 30 நாட்கள் தடைவிதிக்கப்பட்ட நபர்: பொதுமக்கள் அளித்த புகார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தில் பிரதான சந்தைப்பகுதி ஒன்றில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர் மீது பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் ஒருவர் வழிபோக்கர்களை துன்புறுத்துவதாக, புதன்கிழமை பிற்பகல் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பிரதான சந்தைப்பகுதியில் நின்று, வழிபோக்கர்களிடன் பணம் கேட்பதாகவும், மறுப்பவர்களை கத்தியைக்காட்டி மிரட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், பொதுமக்களை மிரட்டிய அந்த நபரை அடையாளம் கண்டனர்.

31 வயதான அந்த நபரிடம் இருந்து சமையல் கத்தி ஒன்றும் கொஞ்சம் கஞ்சாவும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பொதுமக்களை துன்புறுத்திய செயலுக்காக 30 நாட்கள் நகருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டதுடன், காவல் நிலையத்தில் இருந்தும் வெளியேற அனுமதித்தனர்.

பொலிசாருக்கு அந்த நபர் ஏற்கனவே அறிமுகமாமவர் என்றே கூறப்படுகிறது. பல முறை அவர் பொலிஸ் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவத்தை பொதுமக்கள் உரிய முறையில் கையாண்டதாக கூறும் பொலிசார்,

இதுபோன்ற தருணத்தில் கண்டிப்பாக பொலிசாரின் உதவியை பொதுமக்கள் நாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்