கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவதில் சிக்கல்: 5 மில்லியன் டோஸ்களை விற்க தயாராகும் சுவிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிஸ் மருத்துவ நிர்வாகம் ஒப்புதல் அளிக்க தாமதமாகும் நிலை ஏற்பட்டால், 5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி டோஸ்களை விற்பனை செய்ய சுவிஸ் நிர்வாகம் தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கைகள் பல நாடுகளில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரித்தானிய தயாரிப்பான அஸ்ட்ராஜெனெகா தொடர்பில் சுவிட்சர்லாந்தில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அஸ்ட்ராஜெனெகா சார்பில் சுவிட்சர்லாந்துக்கான 7-வது தொகுப்பு மிக விரைவில் வந்து சேர உள்ளது.

ஆனால், தற்போது அந்த 5.3 மில்லியன் டோஸ் மருந்துகளையும் சுவிஸ் நிர்வாகம் விற்கவோ அல்லது அன்பளிப்பாக அளிக்கவோ தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முதன்மை காரணமாக கூறப்படுவது, ஒப்புதல் அளிக்க சுவிஸ் மருத்துவ நிர்வாகம் தாமதப்படுத்துவதே.

கடந்த அக்டோபரில் இருந்தே அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு வரும் சுவிஸ் மருத்துவ நிர்வாகம், இதுவரை உறுதியான ஒரு முடிவுக்கு வரவில்லை என்பது மட்டுமல்ல, ஒப்புதல் அளிக்க மேலதிக தரவுகள் தேவை எனவும் கூறி வருகிறது.

இதனிடையே, தடுப்பூசி கொள்முதல் பொறுப்பில் இருக்கும் Nora Kronig தெரிவிக்கையில், விற்பனை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது என்பது தற்போது ஒரு சரியான முடிவாக இருக்காது,

ஆனால் தடுப்பூசி ஒப்புதல் பெறத் தவறினால் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றார். மேலும், சுவிட்சர்லாந்து ஒன்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பு மருந்தை சார்ந்தது இருக்கவில்லை,

தேவைப்பட்டால் தங்களுக்கான 7-வது தொகுப்பு 5.3 மில்லியன் டோஸ்களை மற்றவர்களுக்கு அளிப்பதை அரசாங்கம் மறுக்கவில்லை என்றார்.

இதனிடையே, சுவிஸ் மருத்துவ நிர்வாகம் ஒப்புதல் அளித்ததும் மிக விரைவில் தடுப்பூசி மருந்தை அளிக்க தயாராக இருப்பதாக அஸ்ட்ராஜெனெகா தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்