கொரோனா தடுப்பூசி விஷயத்தில் சுவிஸ் அரசு எடுக்கவுள்ள முக்கிய முடிவு! என்ன காரணம்.. கசிந்த தகவல்

Report Print Basu in சுவிற்சர்லாந்து
0Shares

கொரோனா தடுப்பூசிக்காக பிரித்தானியா-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான AstraZeneca உடன் போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து சுவிட்சர்லாந்து விலகவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் சுவிஸ் அரசாங்கம் AstraZeneca நிறுவனத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ், 5.3 மில்லியன் டோஸ் தடுப்பூசியைப் பெற உள்ளது.

இந்நிலையில், சுவிஸ் பொது சுகாதாரத்திற்கான மத்திய அலுவலகத்தை மேற்கோள்காட்டி சுவிஸ் NZZ am Sonntag செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான விருப்பத்தை அதிகாரிகள் தற்போது பரிசீலிக்கவில்லை, ஆனால் நாட்டில் தடுப்பூசி அங்கீகரிக்கப்படாவிட்டால் அத்தகைய வாய்ப்பு உள்ளது.

ஒப்பந்தத்தின் கீழ் உத்தரவிடப்பட்ட AstraZeneca தடுப்பூசி டோஸ்களை வேறொரு நாட்டிற்கு வழங்கும் வாய்ப்பு குறித்தும் சுவிட்சர்லாந்து பரிசீலிக்கிறது.

கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் திட்டத்தை சுவிஸ் சமீபத்தில் வெளியிட்டது, அதில் AstraZeneca தடுப்பூசி இடம்பெறாத நிலையில் தற்போது NZZ am Sonntag செய்தித்தாள் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

அதேசமயம், அனுமதி வழங்குவதற்கு முன் இந்த மாத தொடக்கத்தில் AstraZeneca தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் குறித்த கூடுதல் தரவை சுவிட்சர்லாந்து கோரியது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டாளர்கள், ஜனவரி மாத இறுதியில் அனைத்து வயதினருக்கும் AstraZeneca/Oxford தடுப்பூசியை அங்கீகரித்தனர்.

இருப்பினும், 55 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதன் செயல்திறன் குறித்த தரவு இல்லாததால், பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 55 அல்லது 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த பரிந்துரைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்