சுவிட்சர்லாந்தில் 2020இல் மட்டும் கருணைக்கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தில் 2020இல் கருணைக்கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தில் 1,282 பேர், தங்கள் விருப்பத்தின்பேரில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அதாவது, 2019ஆம் ஆண்டைவிட 2020ஆம் ஆண்டில் 68 பேர் கூடுதலாக கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜேர்மன் மற்றும் இத்தாலி மொழி பேசும் சுவிஸ் பகுதியில் மட்டும் 913 பேர் தங்கள் விருப்பத்தின்பேரில் மருத்துவர்களின் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சூரிச்சில் 312 பேரும், Bernஇல் 133 பேரும், Aargauவில் 86 பேரும், St.Gallenஇல் 53 பேரும், Basel-Landஇல் 44 பேரும், Lucerneஇல் 43 பேரும் Thurgauவில் 37 பேரும், தங்கள் விருப்பத்தின்பேரில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பகுதியில் 369 பேர் தங்கள் விருப்பத்தின்பேரில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்து வெளிநாட்டவர்களையும் தங்கள் விருப்பத்தின்பேரில் கருணைக்கொலைக்கு அனுமதிப்பதால், தற்கொலை சுற்றுலா என்ற ஒரு விடயத்துக்கு வழிவகுப்பதாக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்