வாடிக்கையாளர்களை ஈர்க்க சுவிஸ் வங்கியின் நூதன திட்டம்: பின்னர் நடந்த சுவாரசிய சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டல பிராந்திய வங்கியான EEK, அதன் ஆண்டுவிழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க முன்னெடுத்த திட்டம் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.

சனிக்கிழமை Münchenwiler பகுதியில் சுமார் 200,000 பிராங்குகள் மதிப்புள்ள வவுச்சர்களை இணைத்து EEK வங்கி 10,000 பலூன்களை காற்றில் பறத்தியது.

சுற்றுவட்டாரப்பகுதி மக்களை குதூகலப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பலூன்களை கைப்பற்றும் மக்களுக்கு, அதில் இணைக்கப்பட்டுள்ள வவுச்சர்களை வங்கியில் செலுத்தி 20 பிராங்குகளை பணமாக பெற்றிக்கொள்ளலாம்.

ஆனால் வங்கியின் இந்த திட்டம், இலக்கை எட்டாமல் போனதுடன், அப்பகுதியில் உள்ள வெகு சிலருக்கு மட்டுமே பலூன் கைகளில் சிக்கியுள்ளது.

பறக்க விடப்பட்ட அந்த சிவப்பு பலூன்கள் எமென்டல், லாங்கேந்தல், ஆர்காவ் மண்டலம் மட்டுமல்ல சில பலூன்கள் தெற்கு ஜேர்மனி வரை பறந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும், சனிக்கிழமை பலூன்கள் பறக்கவிடும் முன்னதாக EEK வங்கி பலமுறை ஒத்திகை நடத்தியும் உள்ளது.

சம்பவம் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ள நிபுணர்கள் குழுவையும் ஏற்பாடு செய்திருந்தது.

இதனிடையே, பெர்ன் பிராந்தியத்தில் பலூன்கள் எதுவும் கீழே இறக்கவில்லை எனவும் பெர்ன் மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதில் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக வங்கியின் தலைவர் Daniel Pfanner தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்