முக்கிய பொறுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணை மோசமாக விமர்சித்த சுவிஸ் பத்திரிகைகள்: நடந்தது என்ன?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares

ஜெனீவாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் உலக வர்த்தக அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒரு கருப்பினப்பெண்.

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் மற்றும் கருப்பினப் பெண் தலைவரான அவரது பெயர் Ngozi Okonjo-Iweala (66).

ஆனால், அவர் அந்த முக்கிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்த பாட்டிதான் உலக வர்த்தக அமைப்பின் தலைவராக ஆக இருக்கிறார் என கேலியாக செய்தி வெளியிட்டன சில சுவிஸ் பத்திரிகைகள்.

உண்மையில், Ngozi, நைஜீரியாவின் நிதி மற்றும் வெளியுறவு அமைச்சராக பணியாற்றியதுடன், உலக வங்கியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிகுந்த பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியும் ஆவார்.

அவ்வளவு அனுபவம் வாய்ந்த அவர் ஒரு கருப்பினப்பெண் என்பதாலோ என்னவோ, அவர் மோசமாக வர்ணிக்கப்பட, ஐக்கிய நாடுகள் ஏஜன்சிகளின் பெண் தலைவர்களும், 124 பெண் தூதர்களும், சுவிஸ் பத்திரிகைகள் வெளியிட்ட அந்த செய்தியின் தலைப்பு தாக்கும் வகையிலானது, பாலின மற்றும் இன ரீதியிலானது என்று கூறும் புகார் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.

அதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்ட அந்த பத்திரிகை, மன்னிப்புக் கோரியுள்ளது.

அவர்கள் சரியான நேரத்தில் மன்னிப்புக் கோரியது அவசியமான ஒன்று என்று கூறி அதை வரவேற்றுள்ள Ngozi, தனக்காக குரல் கொடுத்த சகோதரிகள், தலைவர்கள் மற்றும் 124 தூதர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்