சுவிஸில் வகுப்பை கட் அடிக்க 3 மாணவர்கள் செய்த செயல்! உண்மை வெளிவந்ததால் சந்திக்கவுள்ள பயங்கரமான விளைவு

Report Print Ragavan Ragavan in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தில் வகுப்பை கட் அடிப்பதற்காக செய்த தவறான காரியத்தால் 3 மாணவர்கள் கடுமையான விளைவுகளை சந்தித்து வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தின் Basel நகரில் உள்ள 3 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சில நாட்கள் பள்ளியைத் தவிர்க்கலாம் என நினைத்து தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக பொய்யான சோதனை முடிவை காட்டி ஏமாற்றியுள்ளனர்.

அதனை நம்பிய பள்ளி நிர்வாகம், விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, ஆசிரியர்கள் உட்பட முழு வகுப்பையும் 10 நாட்களுக்கு வீட்டிற்கு அனுப்பியது.

இவர்கள் 3 பேர் ஏமாற்ற நினைத்ததன் விளைவாக, பள்ளியைச் சேர்ந்த 25 பேர், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் என அனைவருக்கும் அடுத்த 10 நாட்களுக்கு வீட்டிலிருந்து தொலைநிலை வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

இப்போது உண்மை தெரியவந்த நிலையில், அந்த 3 மாணவர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.

அவர்களின் இந்த விளையாட்டான செயல் சுவிட்சர்லாந்தின் தொற்றுநோய் சட்டத்தின் மீறலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் பள்ளியிலிருந்து மட்டுமல்லாமல், சட்டத்திலிருந்தும் விளைவுகளை சந்திக்கவுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்