ஆல்ஃப்ஸ் மலையில் கிரிக்கெட் தொடர் - விளையாடுவது யார் தெரியுமா...

Report Print Tamilini in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற ஆல்ஃப்ஸ் மலையில் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஸ்மித், அப்ரிடி, சேவாக் இடம் பெறுகிறார்கள்.

ஐரோப்பிய கண்டத்தில் 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுவது ஆல்ப்ஸ் மலைத்தொடராகும். இது 1200 கிலோ மீட்டர் விரிந்து படர்ந்துள்ளது. இந்த மலை பனியால் சூழ்ந்திருக்கும். பனிச்சருக்கு விளையாட்டிற்கு உகந்த இடமாகும். புகழ்வாய்ந்த ஆல்ஃப்ஸ் மலையில் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு செயின்ட் மோரிஸ் தொடர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வருகிற பிப்ரவரி 8-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை இத்தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் பங்கேற்கிறார்.

அவருடன் பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடி, விரேந்திர சேவாக், மொகமது கயூப், சோயிப் அக்தர், ஜெயவர்தனே, மலிங்கா, மைக் ஹசி, கல்லிஸ், டேனில் வெட்டோரி, நாதன் மெக்கல்லம், எலியாட், மோன்டி பனேசர், ஒவைஸ் ஷா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

‘‘என்ன எதிர்பார்ப்பு என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், உலகின் தலைசிறந்த இடத்தில் ஒன்றான சுவிட்சர்லாந்து ஆல்ஃப்ஸ் மலையில் விளையாட உற்சாகமாக இருக்கிறேன். இந்த போட்டி பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்