கமெராவில் மட்டும் ஆவிகள் சிக்குவது எப்படி?

Report Print Printha in தொழில்நுட்பம்

ஆவிகள், பேய்கள் என்றாலே ஒருவித அச்ச உணர்வுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆவிகள் நம் கண்களுக்கு புலப்படாமல், கமெராவில் சிக்குகின்றன.

ஆவிகள் கேமராவில் சிக்குவது எப்படி?

ப்லிம் கமெரா முதல் ஸ்மார்ட் போன் கமெரா வரை உள்ள கமெராக்களில் ஆவிகள் தென்படும்.

இமேஜ் அலியசிங் (image aliasing) எனும் புகைப்பட சிதைவு மற்றும் புகைப்பட தகவலை பதிவு செய்யும் கமெரா, சென்சார் எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவைகளில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக பேய் போன்ற உருவங்கள் தோன்றுகிறது.

ஸ்டீரியோஸ்கோபிக் படங்கள் (stereoscopic images), இரட்டை வெளிப்பாடு எனப்படும் டபுள் எக்ஸ்போஷார் (double exposure) போன்றவை கூட பேய்களின் உருவங்களை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாக பயன்படுகிறது.

எனவே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆவிகள் மற்றும் பேய்கள் தென்படுவதை போன்ற புகைப்படங்களை உருவாக்கலாம்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments