ஐபிஎல் போட்டிகளை இனி விர்சுவல் ரியாலிட்டியில் பார்க்கலாம்

Report Print Kabilan in தொழில்நுட்பம்
61Shares
61Shares
lankasrimarket.com

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை ‘Virtual Reality’ தொழில்நுட்பத்தின் மூலமாக பார்ப்பதற்கான வசதியை ஸ்டார் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது.

ஏப்ரல் 5ஆம் திகதி முதல் மே 21ஆம் திகதி வரை நடைபெற உள்ள இந்த தொடர், மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

இதற்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ள ஸ்டார் நிறுவனம், 2022ஆம் ஆண்டு வரை அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் ஒளிபரப்பும். ’Hot Star' செயலி மூலமாக ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும்.

இந்நிலையில் அந்த செயலியுடன் ‘Virtual Reality' எனும் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது. ‘VR' எனும் Option-ஐ அழுத்தி இனி ஐபிஎல் போட்டிகளை ‘Virtual Reality'-யில் காணலாம் என ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்பம் போட்டிகளை நேரிலேயே பார்ப்பது போன்ற உணர்வைத் தரும், மேலும் நாம் எப்போது வேண்டுமானாலும் கமெராவின் கோணத்தை மாற்றி, பிடித்த இடத்தையோ அல்லது பிடித்த வீரரையோ பார்க்க முடியும்.

அதனுடன் வீடியோ இடையில் நிறுத்தி, பின்னோக்கி சென்று என நாமே அங்கு இருக்கும் Cameraman போல Angle-களை மாற்றி விளையாட்டை ரசிக்கலாம்.

‘Virtual Reality' கண்ணாடி ஒன்றை நமது கைப்பேசியுடன் இணைத்துக் கொண்டால் போதும், இதன் மூலம் அனைத்து போட்டிகளையும் 360 டிகிரி கோணத்தில் காண முடியும்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்