வாட்ஸ்அப் இணை நிறுவனர் வெளியிட்ட சர்ச்சை ட்வீட்: சிக்கலில் பேஸ்புக்

Report Print Kavitha in தொழில்நுட்பம்
199Shares
199Shares
lankasrimarket.com

பேஸ்புக் குறித்து வாட்ஸ் அப்பின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் முடிசூடா மன்னனாக திகழும் பேஸ்புக் மீது சில நாட்களுக்கு முன் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் பரபரப்பான குற்றச்சாட்டை கூறியது.

அதாவது, ஜனாதிபதி தேர்தலின் போது 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி உதவி செய்ததாக கூறியது.

இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வாட்ஸ் அப் செயலியின் இணை நிறுவனர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், “ ஃபேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம் இது” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்