இந்த இடங்களில் கூட கேமரா இருக்கலாம்: உஷார்

Report Print Printha in தொழில்நுட்பம்

தற்போதைய காலத்தில் வரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தாலும், சில குறிப்பிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

அதன் அடிப்படையில் குறிப்பாக ஸ்பை கேமிரா மாடல்கள் மிகவும் எதிர்பாராத வடிவங்களில் வருகிறது.

இந்த ஸ்பை கேம் உற்பத்தியாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக ரிமோட் கண்ட்ரோல், எச்டி வீடியோ, மெமரி கார்டு வசதி ஆகியவற்றை கொண்டு முழுமையான முறையில் கேமராக்களை தயாரிக்கின்றனர்.

ஸ்பை கேமராக்கள் எங்கெல்லாம் பொருத்தலாம்?
  • யூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ்(USB flash drive) சாதனத்தில் எளிமையாக ஸ்பை கேமராவை பொறுத்த முடியும்.
  • வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதியுடன் ஜெல் ஸ்பை கேமரா தயாரிக்கிப்படுவதால், இதை ஷவர் ஜெல் போன்றவற்றில் பொறுத்த முடியும்.
  • சட்டையில் அணியும் டைகள் மற்றும் WI-FI AC ADAPTER சாதனங்களிலும் கேமரா இருக்கலாம்.
  • பாத்ரூம் டிஷ்யூ பேப்பர் பாக்ஸ் மற்றும் பொம்மைகளிலும் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.
  • செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமரா இருக்கலாம். ஆனால் இவற்றில் டிவிஆர் போன்று மினி கேமராவாக செயல்படும்.
  • பேனா, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ-க்கள் ஆகியவற்றிலும் ஸ்பை கேமராவை பொருத்தலாம்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்