LinkedIn தளத்தின் மோசடி தொடர்பில் விசாரணை: நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தொழில்வாய்ப்பு சமூகவலைத்தளமாக LinkedIn விளங்குகின்றது.

இத்தளமானது மின்னஞ்சல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதாவது LinkedIn தளத்தில் கணக்கு வைத்திருக்காதவர்களின் சுமார் 18 மில்லியன் மின்னஞ்சல் முகவரிகளை பேஸ்புக் விளம்பரத்திற்காக பயன்படுத்திவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அயர்லாந்திலுள்ள தரவுப் பாதுகாப்பு கமிஷன் (Data Protection Commission) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

2018 ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பான விசாரணையே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers