மைக்ரோசொப்ட்டின் தவறை சுட்டிக்காட்டிய கேரள இளைஞன்: பாதுகாக்கப்பட்ட 40 கோடி பயனர்கள்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கூகுள், மைக்ரோசொப்ட் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது உற்பத்திகளை மிகவும் நுணுக்கமாகவே வடிவமைக்கும் ஆற்றல் கொண்டவை.

எனினும் இதனைத் தாண்டியும் குறைபாடுகள் காணப்படவே செய்கின்றன.

மைக்ரோசொப்ட்டின் இவ்வாறானதொரு குறைபாட்டினை சுட்டிக்காட்டிய கேரளாவை சேர்ந்த சஹாட் என்னும் இளைஞன் சுமார் 40 கோடி பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பட காரணமாக விளங்கியுள்ளார்.

Safetydetective.com எனும் இணையத்தளத்தில் சைபர் பாதுகாப்பு பொறியிலாளராக பணியாற்றும் இவர் மைக்ரோசொப்ட்டின் குறிமுறையில் (Code) காணப்பட்ட தவறையே தானாக முன்வந்து சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தவறு நீக்கப்பட்டிருக்காவிடின் Microsoft Outlook, Microsoft Store, Office 365 போன்றவற்றில் கணக்குளை வைத்திருக்கும் பயனர்கள் 40 கோடி பேரின் தகவல்களை ஹேக் செய்யப்பட ஏதுவாக இருந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தவறினை சுட்டிக்காட்டிய சஹாட்டிற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் பணப்பரிசிலை வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers