மனிதனைப் போல ஏமாற்றும் திறன் கொண்ட ஏஐ தொழில்நுட்பம்! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

Report Print Kabilan in தொழில்நுட்பம்

ஏஐ தொழில்நுட்ப எந்திரங்கள் தகவல்களை மறைத்து செயல்படும் ஆற்றல் கொண்டவையாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதனின் கட்டளையின்றி தாமாக செயல்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(Artificial Intelligence) மீதான ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன. ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சில வகை சாதனங்களில் இதன் பயன்பாடு புகுத்தப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்பம் சுயமாக சிந்தித்தால் மனித இனத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்ற கருத்துகளும் நிலவுகின்றன.

இந்நிலையில் ஏ.ஐ தொழில்நுட்பம் புகைப்படங்களை வரைபடமாக மாற்றும் ஒரு செயல்பாட்டின் போது சில தகவல்களை பின்னர் பயன்படுத்த மறைத்து வைத்துக் கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

CycleGAN என்ற ஏ.ஐ தொழில்நுட்பமானது படங்களை மாற்றியமைக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது இந்த எந்திரத்திற்கு, வீதி வரைபடங்களில் இருந்து வான்வழி புகைப்படங்களை மறுகட்டமைக்கும் வழிமுறையை செய்யுமாறு கட்டளை விதிக்கப்பட்டது. ஆனால், முதல் செயல்முறையின் போது அகற்றப்பட்ட தகவலை இது காட்டியது.

இதன்மூலம், படம் அல்லது படத்தில் இருந்து வரைபடத்தை உருவாக்க இந்த எந்திரம் உண்மையில் கற்றுக்கொள்ளவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், மற்றவற்றின் இரைச்சல் வடிவங்களிடமிருந்து ஒரு அம்சத்தை நுட்பமாக எவ்வாறு குறியாக்குவது என்பதை இது அறிந்துள்ளது. இது ஒரு எந்திரத்தின் சிறந்த உதாரணமாக தோன்றினாலும், உண்மையில் அதற்கு எதிர்மாறாக உள்ளது.

மனிதர்களைப் போல கடினமான வேலையை செய்ய போதுமான திறன் இல்லாதபோது, இந்த எந்திரம் எவ்வாறு ஏமாற்றுவது என்பதை கண்டறிந்து வைத்திருக்கிறது. இந்த விடயம் ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்